அரியலூர் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு,சாலை பணியாளர்கள் பல்வேறு வாழ்வாதார கோரிக் கைகளை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி நிறைவேற்ற கோரி கடந்த 12 8 2025 அன்று சென்னையில் நடந்த தொடர் உண்ணா விரதப் போராட்டத்தில் கலந்து கொள்ள மாநில முழுவதிலிருந்து , சென்னை சென்ற சாலை பணியாளர்களை கைது செய்து கொடுமைப்படுத்திய தமிழக அரசின் செயல்பாட்டை கண்டித்து,தமிழ்நாடு நெடுஞ் சாலைத் துறை சாலை பணியாளர் சங்கத்தின் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் தங்களின் முகங்களில் அரக்க முகமூடி அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர் பைரவன் தலைமைதாங்கினார்.ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த அனைவரை யும் சங்கத்தின் மா. இணை செயலாளர் என் உதயசூரியன் வரவேற்றார்.சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் எஸ் ஆசை தம்பி,மாநில செயற்குழு உறுப்பி னர்பி.சண்முகமூர்த்தி,மாவட்ட இணை செயலாளர் என் இளவரசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.அதைத் தொடர்ந்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ எஸ் ஆர் அம்பேத்கார்
சென்னையில் கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி நடந்த உண்ணாவிரதம் போராட்டத்தில் கலந்து கொண்ட சாலை பணியாளர்களை கைது செய்து துன்புறுத்திய, தமிழக அரசின் செயல்பாட்டை கண்டித்து பேசினார்.

தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம் கே ஷேக் தாவூத்,எம் ஆர் பி செவிலியர் மேம்பாட்டு சங்க மாநிலத் துணைத் தலைவர் ஆர் ராகவன்,தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே. காந்தி,ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எம் மகாலிங்கம், உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டுசிறப்புரையாற்றினர். சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ச.மகேந்திரன் நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி நிறைவுறையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் கி மூர்த்தி நன்றி கூறினார்.








