• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

நான் மக்களுடன் பணியாற்றுவதே தித்திபான செய்தி..,

ByPrabhu Sekar

Aug 18, 2025

அப்துல் கலாமுக்கு செய்த குற்றத்தை திமுக மீண்டும் செய்யக்கூடாது பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்பொது அவர் கூறுகையில்,

நான் செல்வது திடீர் டெல்லி பயணம் இல்லை மகிழ்வான டெல்லி பயணம், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சிபி ராதாகிருஷ்ணன் குடியரசு துணை தலைவர்தான், ஏனென்றால் தேசிய ஜனநாயக கூட்டணியில் அருதி பெரும்பான்மை வாக்குகள் இருக்கிறது,

சிபி ராதாகிருஷ்ணன் தமிழகத்தைச் சேர்ந்தவர் தமிழகத்திற்கு மரியாதை சேர்க்க கூடியவர், இதனால் கட்சி வேறுபாடு இல்லாமல் அனைவரும் அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,

இதற்கு முன்பு தமிழராக இருந்த அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக அறிவிக்கப்பட்ட போது அவருக்கு ஆதரவு கொடுக்காமல் மாபெரும் குற்றத்தை திமுக போன்ற கட்சிகள் செய்தனர் இந்த முறை அது போன்று செய்யக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன்,

நான் எப்போதும் மக்களுடன் பணியாற்றுவதே எனக்கு தித்திபான செய்தி ஆளுநர் ஆகுவது கிடையாது, நான் டெல்லி செல்வது சிபி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்கும் பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதற்கு செல்கிறேன்,

ஆனால் சிபி ராதாகிருஷ்ணன் ஆர்எஸ்எஸ் காரர் அதனால் நாங்கள் ஆதரிக்க மாட்டோம் எனக் கூறுவது எப்படி சரியாக இருக்கும் என்று எனக்குப் புரியவில்லை அவர் ஊழல்வாதி இல்லை ஆர்எஸ்காரர்தான், அவர்கள் நல்ல வாழ்க்கை முறையை மேற்கொள்ள கூடியவர்கள்,ஒரு நல்ல விஷயத்தை எதிர்மறை விஷயமாக எடுத்துக் கொள்வது நல்லதல்ல,

எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் அப்படி அவர்கள் ஆதரவு அளிக்கவில்லை என்றால் அவர்களின் தமிழ் பற்று வேஷம் கலைந்து விடும்,

போட்டி பேசாமல்,விதண்டவாதம் பேசாமல் தமிழ் மண்ணை சார்ந்த தலைவருக்கு மாற்று கருத்து இருந்தாலும் ஆதரவு அளிக்க வேண்டும்,இதுதான தமிழ் மக்களுக்கு திமுக செய்யும் சரியான கடமையாக இருக்கு முடியும்,

திறமையானவர்க்கு வாய்ப்பு குடுத்துள்ளனர்,அவர் நல்ல தலைவர் இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார், அதனால் ராஜ்யசபாவை நன்றாக நடத்துவார், ஆளுநராகவும் இருந்துள்ளார் அவரை விட தகுதியானவர் யார் இருக்கிறார்,

செல்வபெருந்தகைக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை,அவர் தமிழை மதிக்க கற்றுகொள்ளுங்கள், சிதம்பரம் தமிழகத்துக்கு என்ன செய்தார்,5 திமுக மத்திய அமைச்சர் என்ன செய்தனர் பட்டியலிட முடியுமா,

ஆனால் பிரதமர் மோடி அவர்களால் சென்னை,தூத்துக்குடி,திருச்சி விமானநிலையம்,தூத்துக்குடி துறைமுகம் விரிவுபடுத்தபட்டுள்ளது, இதனால்தான் தூத்துக்குடியில் கார் தொழிற்சாலை அமைக்க முடிகிறது,

20 ஆண்டு திமுக காங்கிரஸ் ஆட்சியில் என்ன செய்தார்கள் பட்டியலிட முடியுமா,ஆனால பாஜக 10 லட்சம் கோடி ரூபாய்க்கு உள்கட்டமைப்பு வசதி தமிழகத்துக்கு கொண்டு வந்துள்ளோம்,

இந்த முறை அண்ணன் சிபி ராதாகிருஷ்ணனுக்கு திமுக ஆதரவு தரவில்லை என்றால் தமிழக மக்கள் உங்களை புரிந்துகொள்வார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்,

குடியரசு துணை தலைவர் வேட்பாளர் என அறிவிக்கபட்ட பின் கட்சி சார்பற்றவராக மாறிவிடுவார்கள், அரசியலில் அடிப்படையில் அனைவரும் கட்சி சார்ந்தவர்களாக தான் இருப்பார்கள்,

இன்றைய குடியரசு துணைத் தலைவர் தமிழகத்தில் இருந்து வருகிறார் அதை அனைவருக்கும் புரிந்து கொள்ள வேண்டும்

தவெக பற்றி சிந்திக்க நேரமில்லை, தவெகவினரே அவர்களை பற்றி எப்போதாவதுதான் சிந்திக்கிறார்கள் அவர்களை பற்றி நாங்கள் ஏன் சிந்திக்க வேண்டும், இவ்வாறு கூறிவிட்டு புறப்பட்ட சென்றனர்,