கோவை நல்லூர்வயல் மற்றும் ஆலாந்துறை புதூர் சங்கமம் கலை குழுவின் 105 வது அரங்கேற்ற விழா கோவை நல்லூர்வயல் பகுதியில் உள்ள சின்மயா மகேஸ்வரர் ஆலய வளாகத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த அரங்கேற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் அமைச்சரும்,அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி வேலுமணிக்கு நடன கலைஞர்களும், ஊர் பொதுமக்களும், கழக நிர்வாகிகளும் சிறப்பான வரவேற்பளித்து, வரவேற்றனர். அதை தொடர்ந்து நடன கலைஞர்களின் ஒயிலாட்ட அரங்கேற்றத்தை துவக்கி வைத்து ரசித்ததுடன், ஒயிலாட்ட கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும் ஒயிலாட்ட கலைஞர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களுடன் இணைந்து ஒயிலாட்டம் ஆடி கலைஞர்களையும், திரண்டு இருந்த பொதுமக்களையும் மகிழ்வித்தார். இந்த நிலழ்ச்சியில் தெற்கு மாவட்ட பொருளாளர் N.S.கருப்புசாமி , தொண்டாமுத்தூர்விவசாய அணி ஒன்றிய செயலாளர் நாச்சிமுத்து,
கூட்டுறவு வங்கி தலைவர் N.C.சுப்ரமணியம், மாவட்ட கவுன்சிலர் D.C.பிரதீப், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் K.V.செல்லமுத்து, ஒன்றிய விவசாய பிரிவு தலைவர் வெள்ளைச்சாமி, சங்கமம் கலை குழுவின் ஆசிரியர்களும், கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும், ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்..