தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆக ஐ.பெரியசாமி இருந்து வருகிறார்.
இவரது வீடு திண்டுக்கல் துரைராஜ் நகரில் உள்ளது இவரது வீட்டில் காலை 7:30 மணி முதல் 7 அமலாக்கத் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் 8 CRPF போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் வள்ளலார் நகரில் உள்ள அமைச்சர் ஐ . பெரியசாமியின் மகள் இந்திரா வீட்டிலும் ஆறு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அங்கு 10 CRPF துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவரது மகன் செந்தில்குமார் திமுக கிழக்கு மாவட்ட செயலாளராகவும் பழனி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
இவரது வீடு சீலப்பாடியில் உள்ளது. இவரது வீட்டில் 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
8 CRPF போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மூன்று வீடுகளிலும் காலை 7:30 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் தகவல் அறிந்து திமுக கட்சி தொண்டர்கள் வீட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
ஏற்கனவே அமைச்சர் ஐ பெரியசாமி சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் இந்த வழக்கு வருகிற 18-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில் இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.








