• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தேசியக் கொடி ஏற்றி வைத்த ஆட்சியர் தங்கவேல் ..,

ByAnandakumar

Aug 15, 2025

கரூரில் 79 ஆவது சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தேசியக் கொடி ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.

இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். பின்னர் சமாதான புறாவை பறக்கவிட்டார்.

இதனை தொடர்ந்து 31 பயணாளிக்கு ரூ. 54,12, 930 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனையடுத்து சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர், தீயணைப்பு துறையினருக்கு, மருத்துவர்கள், செவிலியர்கள் என ஏராளமானோருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கினார்.

பின்னர் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.