புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் நாட்டின் 79வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காரைக்கால் கடற்கரை சாலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் புதுச்சேரி மாநில அமைச்சர் திருமுருகன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இதனை அடுத்து அமைச்சர் திருமுருகன் காவல்துறை மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து சுதந்திர தின உரையில் அமைச்சர் திருமுருகன் பேசுகையில் காரைக்கால் மாவட்டம் வளர்ச்சிக்காக புதுச்சேரி அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறினார். சுதந்திர தின விழாவில் பள்ளி மாணவர்கள் பங்குபெற்ற கண்கவர் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. சுதந்திர தின விழாவில் ஆட்சியர் குலோத்துங்கன், முதுநிலைக்காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.