மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி, குலசேகரன் கோட்டை பொன் பெருமாள் கண்மாய் பகுதியில் வனம் நலம் இயக்கம் சார்பாக 80 புங்கை,15 நாவல்,
2 அத்தி,10 அரச மரம்,15 புளியமரம் 1 ஆலமரம் என 123 மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு , பேரூராட்சித் தலைவர் மு. பால்பாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது:-
மதுரை மாவட்டத்தில், சோழவந்தான் தொகுதி இயற்கையான சூழ்நிலையில் உருவான தொகுதியாகும். வடக்கே சிறுமலை தெற்கு நாகமலை இடையில் வைகை முல்லை பெரியாறு நதிகள் அமைந்துள்ளது.
இதன் தண்ணீர் மூலமும் சிறுமலை பகுதியில் இருந்து வீசும் சுகாதார காற்றை சுவாசிக்கும் மக்களாக இருந்து வருகிறோம். பூமி வெப்பமாயன் மாவதை தடுக்கும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கனவை நினை வாக்கும் வகையில் 1 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியை வாடிப்பட்டி பகுதியில் வனம் நலம் இயக்கம் தொடங்கியுள்ளது பாராட்டுக்குரியது.
இந்த பணியில், தன்னார்வலர்கள் ஆர்வத்தோடும் அக்கறையோடும் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த மரக்கன்றுகளை தண்ணீர் ஊற்றி பாதுகாக்கவும் பராமரிக்கவும் பேரூராட்சி சார்பாக உரிய முயற்சிகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதன் ஏற்பாடுகளை வனம் நலம் இயக்க தன்னார்வலர்கள் செய்திருந்தனர் .








