காரைக்கால் மாவட்டத்தில் வீடுகளுக்கு குழாய்கள் மூலம் சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தில் முதற்கட்டமாக 7.3 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பகுதிகளில் வீடுகளுக்கு குழாய்கள் மூலம் சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை பல்வேறு சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் முதல்முறையாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தெற்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் முதல் கட்டமாக 7.3 கிலோமீட்டர் தூரத்திற்கு வீடுகளுக்கு குழாய்கள் மூலம் சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம் அமைக்கும் பணிகளை இன்று தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்த பணிகள் மூன்று மாதத்தில் நிறைவடைந்து வீடுகளுக்கு குழாய்கள் மூலம் சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்படும் என்றும் படிப்படியாக காரைக்கால் மாவட்டம் மட்டுமில்லாமல் புதுச்சேரி மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த பணிகள் முழுமையாக தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.