விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள தூங்கா ரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (75). இவர் ஓய்வு பெற்ற அரசு அலுவலர் ஆவார்.

ஓய்வு பெற்றபின் தனது வீட்டைச் சுற்றி தோட்டம் அமைத்து பல்வேறு மரம் செடி கொடிகளை வளர்த்து வந்துள்ளார். இதில் ஒரு சந்தன மரமும் அடங்கும். சுமார் 10 அடி உயரம் வளர்ந்த இந்த சந்தன மரம் நேற்று திடீரென காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக சுப்பிரமணியன் தான் வளர்த்த சந்தன மரத்தை காணவில்லை என அருகில் உள்ள ஏழாயிரம் பண்ணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.