தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள நாகமணி அம்மாள் நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தமிழ் பாரம்பரியத்தை அறிந்து கொள்ளும் வகையில் இன்று தமிழ் பாரம்பரிய பண்பாட்டுத் திருவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் பண்டைய காலங்களில் இருந்த மாட்டு வண்டி, குடிசை வீடுகள், அம்மி, ஆட்டுறல், பழைய கால பொருட்கள், சிறுவயதில் குழந்தைகள் விளையாடும் விளையாட்டுப் பொருள்கள், மேலும் பாரம்பரிய உணவு வகைகள், அந்த காலத்தில் கடைகளில் கிடைக்கும் மிட்டாய் வகைகள் போன்றவை காட்சிப் பொருளாகவும் குழந்தைகளுக்கு விற்பனை செய்வதற்காகவும் வைக்கப்பட்டு இருந்தன.
மேலும் இந்த விழாவில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கான பாரம்பரிய நடனங்கள், பேச்சுப் போட்டிகள் மற்றும் பழங்கால உடை அணிந்த குழந்தைகளின் பேஷன் ஷோவும் நடைபெற்றது.
இந்த திருவிழாவில் கலந்து கொண்ட ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் அனைவரும் தமிழ் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.








