கன்னியாகுமரி_ திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை எண் 47H_ யில். பார்வதி புரம், மார்த்தாண்டம், குழித்துறை ஆகிய பகுதிகளில் மேம்பாலங்கள் உள்ளன.
மேம் பலத்தில் அதிகமான பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களை இயக்கக்கூடாது. பாலத்தின் கீழ் உள்ள சாலையில் தான் பயணிக்க வேண்டும் என்ற ஆணை இருந்தபோதும். மேம்பாலத்தின் மீதோடுதான் கனிமங்கள் ஏற்றிச்செல்லும்
கண்டெய்னர் லாரிகள்,இடைவெளியின்றி 24_மணி நேரமும் இயக்கப்படுகிறது.

இன்று அதிகாலையில் குழித்துறை பாலத்தின் வழியாக கனிமங்களை ஏற்றிக்கொண்டு
கண்டெய்னர் லாரி ஒன்று திருவனந்தபுரம் நோக்கி அதி வேகமாக சென்று கொண்டிருந்த நிலையில். கண்டெய்னர் லாரிக்கு முன்பாக வெளி மாவட்டத்தை சேர்ந்த மினி லாரி ஒன்று வாகனம் நிறைய பழங்களுடன் சென்றுகொண்டிருந்த போது.
பழம் மூட்டைகளுடன் சென்ற மினி லாரியின் பின்னால் வந்த கண்டெய்னர் லாரி. குழித்துறை பாலத்தின் மீது வைத்து.பழங்களுடன் சென்ற மினி லாரியின் பின் பக்கம் கண்டெய்னர் லாரி மோதியதில் நிலை குலைந்து ஓட்டுநர் என்ன செய்வதென்று திகைத்திருந்த நிலையில் மினி லாரி பாலத்தின் மீது வேகமாக மோதியதில் பாலம் இடிந்த நிலையில். மினி லாரி பாலத்தின் ஒரு பகுதியில் தரையை நோக்கி சாய்ந்த நிலையில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கிறது. அந்த பகுதியில் இருந்த அக்கம் பக்கத்தினர்,மினி லாரி ஓட்டுநரை பத்திரமாக மீட்டனர். பாலத்தின் மீது ஏற்பட்ட விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.