• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

டெம்போ ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்..,

குமரி மாவட்டத்தில் இருந்து தினம் தோறும் 100_கணக்கான கண்டெய்னர் வாகனங்களில் கனிமங்கள் கால, நேரம் இன்றி எப்போதும் எவ்வித கட்டுப்பாடுகள் இன்றி இயங்குவதை தடுக்காத காவல்துறை,

குமரி கிழக்கு மாவட்ட அகஸ்தீஸ்வரம் வட்டார பகுதிகளில் 25 கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ளாக வீடு கட்டும் மண்,ஜல்லி, சிமெண்ட்,கம்பி ஆகிய பொருட்களை எடுத்துச் செல்லும் மினி டெம்போக்கள் காலை,மாலை மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் நேரத்தில் இயக்கக்கூடாது என காவல்துறை வைத்துள்ள கட்டுப்பாடுகளை டெம்போ ஓட்டுநர்கள் முறையாக பின் பற்றி வரும் நிலையில்,

காவல்துறை தினம் காலை மாலை இரவு என எந்த நேரத்திலும். கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்லும் மினி டெம்போ வாகனங்களை போக்குவரத்து காவல் துறையினர் சீர் உடை அணியாது தடுத்து நிறுத்தி. அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் சுமையை ஏற்றி உள்ளதாக அபராதம் விதிப்பது. அஞ்சுகிராமம் சுற்று வட்டாரத்தில் தினம் டெம்போ ஓட்டுநர்கள் சந்தித்து வரும் அவலம் ஒரு தொடர்கதையாக தொடரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஒரு மினி டெம்போ அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பாரம் ஏற்றியுள்ளதாக ரூ.25,000.00 அபராதம் விதித்தனர்.

காவல்துறை கட்டுப்பாடின்றி அபராதம் விதித்துள்ளது குறித்து, கன்னியாகுமரி
துணைக் கண்காணிப்பாளர் இடம் எங்கள் கோரிக்கை மனுவை அளித்தோம். போக்குவரத்து காவல்துறையின் இத்தகைய அபராதம் விதிப்பால், எங்களின் தொழில் மட்டுமே அல்லாது எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால்.
போக்குவரத்து காவல்துறை எங்களை இந்த போராட்டத்திற்கு தள்ளி உள்ளது.

நாங்கள் படும் துன்பத்திற்கு தீர்வு கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். போராட்டத்தில் 100_க்கும் அதிகமான மினி டெம்போ உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் பங்கேற்றனர். போராட்டத்தை ஓட்டுநரை சங்கம் தலைவர் சுனேஷ் செயலாளர் சிவகுமார் ஆகியோர் ஒருங்கிணைந்தனர்.

போராடும் போராட்டக்காரர்களின் கோரிக்கையை, போக்குவரத்து காவல்துறை அதிகாரி நேரடியாக பார்வையிட வேண்டும் என அதிமுகவின் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெஸீம் அரசுக்கு கோரிக்கை வைத்தார்.