ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத்தின் 87வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் பி.எஸ். குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. நிர்வாகிகள் தேர்வு நடத்தப்பட்டது. சங்கத்தின் தலைவராக ராம்கோ தொழில் நிறுவனங்களின் தலைவர் பி.ஆர். வெங்கட்ராமராஜா 9வது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் துணைத் தலைவர்களாக என்.கே. ஸ்ரீகண்டன் ராஜா, ஆர் பத்மநாபன் ஆகியோரும், செயலாளர்களாக எம்.சி. வெங்கடேஸ்வர ராஜா, ஆடிட்டர் ஆர்.நாராயணசாமி ஆகியோரும், இணைச் செயலாளராக கே. மணிவண்ணன், பொருளாளராக பி. எம். ராமராஜ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். துணைத் தலைவர் பத்மநாதன் வரவேற்றுப் பேசினார். செயலாளர் கூட்டத்தில் முன்னாள் உப தலைவர் ஏ. நாகரத்தினம் மறைவிற்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பதவியேற்ற பின் தலைவர் பி ஆர் வெங்கட்ராமராஜா பேசும்போது கூறியதாவது:
“ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத்தின் 87 ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மதுரை தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் டாக்டர் என்.ஜெகதீசன் மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வர்த்தகர்களுக்கு சிறப்பாக வர்த்தகம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வரும் அவரை நாங்கள் பாராட்டுவதில் பெருமை அடைகிறோம் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக இருந்து வணிகர்களுக்கு பொதுமக்களுக்கும் தொண்டு செய்து வருகிறார்.