சுதந்திர தினத்தன்றும் அதைத் தொடர்ந்து வரும் வார இறுதி நாட்களிலும் பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலைக் குறைக்க, ஹூப்பள்ளி காரைக்குடி சிறப்பு ரயில் சேவைகளை இயக்குவது குறித்து தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி

- ரயில் எண். 07331 ஹூப்பள்ளி – காரைக்குடி சிறப்பு ரயில் 14.08.2025 (வியாழக்கிழமை) அன்று மாலை 4.00 மணிக்கு ஹூப்பள்ளியிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.00 மணிக்கு காரைக்குடியை வந்தடையும்.
- ரயில் எண். 07332 காரைக்குடி – ஹுப்பள்ளி சிறப்பு ரயில் 15.08.2025 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 4.45 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.40 மணிக்கு ஹூப்பள்ளியை வந்தடையும். இந்த ரயில் சேவைகள் கீழ்க்கண்ட ரயில் நிறுத்தங்களில் நிறுத்தப்படும், அதன்படி
கரஜ்கி, ஹவேரி, ஹரிஹர், தாவணகெரே, பிரூர், அர்சிகெரே, துமகுரு, சிக்க பன்வாரா, சர் எம். விஸ்வேஸ்வரய்யா முனையம், கிருஷ்ணராஜபுரம், பெங்காரப்பேட்டை, சலாம், நாமக்கல், கரூர். திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை ஆகிய இரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மேலும் சிறப்பு ரயில் சேவைகள் 1 ஏசி 2 அடுக்கு, 1 ஏசி 3 அடுக்கு, 10 ஸ்லீப்பர் வகுப்பு, 3 ஜெனரல் சியோண்ட் வகுப்பு பெட்டிகள் மற்றும் 2 லக்கேஜ் கம் பிரேக் வேன் பெட்டிகளாக இருக்கும் என்று தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.