தமிழக வெற்றி கழக இரண்டாவது மாநில மாநாடு வருகிற 21ஆம் தேதி மதுரை தூத்துக்குடி சாலையில் உள்ள பாரபத்தியில் நடைபெறுகிறது. இதற்காக மாநாட்டுப் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. மாநாட்டில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் கலந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தமிழக கட்சி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் வண்ணம் நூற்றுக்கு மேற்பட்ட ஆட்டோக்களில் பிளக்ஸ் பேனர்கள் ஒட்டப்பட்டு இன்று முதல் பிரச்சாரம் நடைபெற உள்ளது. இதற்காக நூற்றுக்கு மேற்பட்ட ஆட்டோக்கள் மாநாட்டு மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டது கட்சி கொடி மற்றும் பிளக்ஸ் பேனர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த ஆட்டோ பிரச்சார பேரணியை தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.