மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் கூத்தியார் குண்டு பரப்பத்தி தெருவை சேர்ந்த பெரியசாமி இவர் தனக்கன்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இவரும் இவரது மனைவி மகேஸ்வரி மற்றும் மகன் சிவ நித்திஷ் மூன்று வயது பேரன் ஆகியோர் பணி முடித்து இருசக்கர வாகனத்தில் நேற்று காலை மொட்டை மழை பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவரது பின்னால் வந்த அடையாளம் தெரியாத லாரி ஒன்று பயங்கரமாக மோதியதில் தனது பேரனை சாலை ஓரத்தில் தூக்கி எறிந்த மகேஸ்வரி லாரி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் லாரியுடன் தப்பி ஓடினார் தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் அவரது உறவினர்கள் இன்று திடீரென மதுரை கப்பலூர் டோல்கேட் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த திருமங்கலம் காவல் ஆய்வாளர் சரவணகுமார் மற்றும் காவலர்கள் தலைமையிலான காவலர்கள் அவர்களை சமாதானப்படுத்தி சாலையில் ஓரத்தில் அமர வைத்தனர். மேலும் உறவினர்கள் கூறுகையில் விபத்து ஏற்படுத்திய லாரி மற்றும் அந்த ஓட்டுநரை கைது செய்தால் மட்டுமே நாங்கள் உடலை பெற முடியும் எனவும் அதுவரை உடலை வாங்க மாட்டோம் எனவும் கண்ணீர் மல்க தெரிவித்தனர். காவல் துறை உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் என்பது அவர்களுடைய கோரிக்கையாகவே உள்ளது. இதனால் மதுரை திருமங்கலம் டோல்கேட் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.