தாம்பரம் காவல் ஆணையரகத்தில், கடலோர பாதுகப்பு படையில், ஊர்காவல் படையினர் பணியில் சேர, நீச்சல் திறன் கொண்ட இளம் துடிப்பான, மீனவ இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

★குற்றப்பின்னனி இல்லாத நன்னடத்தை உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.
★தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
★மீனவ இளைஞர்களாக இருக்க வேண்டும் (மீனவர்கள் அடையாள அட்டையை சம்மந்தப்பட்ட மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பெற்றிருக்க வேண்டும்)
★2025, ஜூலை, 1அன்று, 18 வயதிற்கு மேல் உள்ளவர்களாகவும், 50 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
★கடல் நீச்சல் தெரிந்தவராக இருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தவறியவர்கள்.
தேர்ச்சி செய்யப்படும் ஊர்காவல் படையினர்களுக்கு, 45 நாட்கள், தினசரி, 1 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்த கடலோர காவல் பாதுகாப்பு படையுடன் இணைந்து, பணிபுரிய கானாத்துார் கடற்கரை காவல் நிலையத்திற்கு அனுப்பப்படுவர். இரவுநேர ரோந்து பணி மற்றும் பகல் நேர ரோந்து பணிக்கு, 560 ரூபாய் சிறப்பு படியாக வழங்கப்படும்.

மேற்கண்ட தகுதியுடைவர்கள் விண்ணப்பங்களை, தாம்பரம் மாநகர காவல் ஆயுதப்படை, ஊர்காவல்படை அலுவலகம், பதுவஞ்சேரி, சென்னை–126, என்ற முகவரியில் இலவசமாக பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செப்., 26ம் தேதி, மாலை 5:00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம்.