திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள கூத்தியார்குண்டு பாரபத்தி தெருவை சேர்ந்த பெரியசாமி தனக்கன்குளம் ஊராட்சியில் துப்புறவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவரும் இவரது மனைவி மகேஸ்வரி மற்றும் இவர்களது மகன் பேரன் சிவ நித்திஷ் மூன்று வயது அழைத்துக் கொண்டு இன்று காலை கடைக்கு செல்வதற்காக இருசக்க வாகனத்தில் மொட்டமலை பைபாஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத லாரி இருசக்கர வாகனத்தில் மோதியது. மகேஸ்வரி நாம் கீழே விழுகப்போகிறோம் என தெரிந்து பேரனை தூக்கி ரோட்டோரம் மண் தரையில் போட்டு விட்டார். அதனால் சிறு காயம் விழுந்து தப்பினார் நித்திஷ்.

ஆனால் பின்னால் விழுந்த மகேஸ்வரி தலையில் லாரி சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார் மோதிய லாரி நிற்காமல் சென்று விட்டது. தகவல் அறிந்து வந்த ஆஸ்டின்பட்டி போலீசார் மகேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவர் மற்றும் லாரியை போலீசார் தேடி வருகிறார்கள்.









