அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடானா சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமிகள் கோவில் முன்பாக மறைந்த முன்னால் முதல்வர் டாக்டர் கலைஞர் புகைப்படத்தினை கோவில் முன்பாக தொங்கவிட்டு மாலை அணிவித்து
கலைஞர் நினைவு நாள் என்ற பெயரில் கடவுள் இல்லை என்பவர்களுக்கு இந்து கோவில் முன்பு இதுபோன்ற நாகரிகமற்ற வேலைகளை செய்ய அனுமதி கொடுத்தது யார்?.

திமுக ஆட்சி என்றால் இந்து கோவில் முன்பு எதை வேண்டுமானலும் செய்வார்களா.? தமிழ் கடவுள் முருகனின் நான்காம் படை வீடானா சுவாமிமலை கோவில் முன்பு மறைந்த முன்னால் முதல்வர் கலைஞர் புகைப்படத்தை கோவில் முன் பகுதியில் தொங்கவிட கோவில் நிர்வாகம் அனுமதி கொடுத்தார்களா?. இந்துக்களை கொச்சை படுத்தும் வகையில் பிரசித்தி பெற்ற சுவாமிமலை கோவில் முன்பாக வைத்துள்ள கலைஞர் புகைப்படத்தை உடனடியாக அகற்ற வேண்டும்.
இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கிறதா?. இது போன்ற நாகரிகமற்ற செயல்களில் திமுகவினர் ஈடுபட்டால் அதனை எதிர்கொள்ளவும் இந்து மக்கள் கட்சி ஆன்மீக அணி தயங்காது என்பதையும் திமுகவினரை எச்சரிக்கிறோம். தமிழகத்தின் முன்னால் முதல்வர் கலைஞர் புகைப்படத்தை பள்ளிவாசல் முன்பாகவோ கிருஸ்தவ தேவாலயங்கள் முன்பாகவோ வைப்பதற்கு திராணி உள்ளதா என இந்து மக்கள் கட்சி ஆன்மீக அணி மாநில செயலாளர் P.குணா திமுக வினருக்கு சவால் விடுத்துள்ளார்.கலைஞர் புகைப்படத்தை கோவில் பகுதியில் இருந்து உடனே அகற்றிடு. போராட தூண்டாதே எனவும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.








