குரோம்பேட்டை சாந்தி நகரை சேர்ந்தவர் பாலாஜி தாக்கு(39)
இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்

இன்று காலை 9 மணி அளவில் வீட்டிலிருந்து பைக்கில் புறப்பட்டவர் ஜி எஸ் டி சாலை மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தின் மேல் சென்றவர் திடீரென பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார்.
இதில் பாலாஜியின் தலை மற்றும் முகம், இடுப்பு ஆகிய பகுதிகளில் எலும்புகள் உடைந்து பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மீனம்பாக்கம் போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று படுகாயத்துடன் இருந்தவரை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பாலாஜி பரிதாபமாக உயிரிழந்தார். இதில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 6ந் தேதி இந்த நிறுவனத்தில் பணி பணிக்கு சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்கொலைக்கு காரணம் பணி சுமை காரணமா அல்லது குடும்பப் பிரச்சனை ஏதாவது இருக்குமோ என்று கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து மேம்பாலத்திலிருந்து கடந்த மாதம் 2 பேரும் தற்போது மீனம்பாக்கம் மேம் பாலத்தில் இருந்து ஒருவரும் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.