தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர் வத்தல் சங்கத்தின் பாரம்பரியத் தொழிலை உலகளவில் உயர்த்தும் நோக்கில், மதுரை அப்பளத்திற்கு புவிசார் குறியீடு (GI Tag) பெறுவதற்கான முயற்சி, கொடைக்கானல் தெரசா பல்கலைக்கழகத்தின் DR. Usha Raja Nandhini வழிகாட்டலின்படி மாநிலத் தலைவர் முனைவர் க. திருமுருகன் தலைமையில், சங்கத்தின் நிர்வாகிகள் சந்துரு, கார்த்திகேயன், சம்பத் ஆகியோரின் கூட்டு ஒத்துழைப்பிலும், சங்க உறுப்பினர்கள் வழங்கிய வலுவான ஆதாரங்களின் அடிப்படையிலும் முன்னேற்றம் கண்டுள்ளது.

இந்தப் பதிவு முயற்சியின் முதல் கட்டம் வெற்றியடைந்துள்ளதையும், தற்போது அதிகாரப்பூர்வ முடிவுக்காக அனைத்து தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும், விரைவில் மதுரை அப்பளத்திற்கு புவிசார் குறியீடு கிடைக்கும் என்று தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கம் தெரிவித்துள்ளது, மேலும் இது பாரம்பரிய தொழிலுக்கு ஒரு உலகமட்ட அங்கீகாரமாகும் என்பது மிகவும் பெருமையான நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ளது.