மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தெற்கு தெரு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் தெற்குதெரு டி.வெள்ளாளப்பட்டி ஆமூர் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திருச்சுனை ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அய்யாபட்டி குன்னாரம்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்நிகழ்வில் மேலூர் வட்டாட்சியர் செந்தாமரை,சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ராஜ்குமார்,மேலூர் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரசாமி சரஸ்வதி செல்லபாண்டியன், சங்கர்கைலாசம்,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துகாமாட்சி முத்துக்குமார், கார்த்திகேயன், உதவி திட்ட அலுவலர் பழனிவேல்,ஊராட்சி செயலாளர்கள் கயல்விழி பொன்னுலிங்கம் பாக்கியலட்சுமி தியாகராஜன் அமுதா உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.