• Tue. Nov 4th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

சங்கரநாராயணசாமி கோவிலில் ஆடி திருவிழா..,

ByV. Ramachandran

Jul 29, 2025

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் மிகவும் புகழ் பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடித்தவசு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும்.

விழா நாட்களில் சுவாமி, அம்பாள் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். . இந்த ஆண்டுக்கான ஆடித்தவசு திருவிழா கோமதி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் 4. மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது. கொடியேற்ற விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆடித்தவசு திருவிழா 11 ம் திருநாளான ஆகஸ்ட் 7ஆம் தேதி வியாழக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்கின்றனர். இரவு இரவு ஸ்ரீ கோமதி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் ஆடிப்பூரம் என்பதால் வளையல்கள் அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். மேலும் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பெண்களுக்கு வளையல்களும் அருட்பிரசாதமும் வழங்கப்பட்டது. இரவில் அம்மன் பூங்கோயில் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் ரத வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.