ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், தங்கள் விமானங்களில், உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்களில், பயணிக்கும் பயணிகள், ஜூலை 28ஆம் தேதி முதல், வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் தேதி வரை, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் பயணிப்பதற்காக, முன்பதிவு செய்து கொள்ளும் பயணிகளுக்கு, பயண கட்டணங்களில் சாதாரண எக்கனாமி வகுப்பு இருக்கைகள் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு, விமான கட்டணத்தில் 15 சதவீதம் தள்ளுபடி அறிவித்துள்ளது.

அதைப்போல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில், பிசினஸ் கிளாஸ், இருக்கைகளுக்கு 20% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில், எக்ஸ்பிரஸ் பிசினஸ் கிளாசில் பயணிக்கும் பயணிகளுக்கு, 25 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.59 மணி வரையில், இந்த சலுகை தள்ளுபடி டிக்கெட்டுகள், முன்பதிவு செய்து கொள்ளலாம். அதில் எக்னாமி சாதாரண வகுப்பு, பிசினஸ் கிளாஸ், எக்ஸ்பிரஸ் பிசினஸ் கிளாஸ் ஆகியவற்றில், சலுகை மற்றும் தள்ளுபடி கட்டணத்தில் பயணிக்க விரும்பும் பயணிகள், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையதளமான www.airindiaexpress.com மற்றும் செல்போன் செயலியில் உள் நுழைந்து, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பெற்ற இந்த சலுகை தள்ளுபடி கட்டண டிக்கெட்டுகளை, பயணிகள் வருகின்ற, 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை, எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி, பயணித்துக் கொள்ளலாம்.
அதைப்போல் பயணிகள் லக்கேஜ் எடுத்து செல்வதற்கும் தாராளமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பிசினஸ் கிளாஸ், எக்ஸ்பிரஸ் பிசினஸ் கிளாஸ் பயணிகளுக்கு, விமானத்தில் இலவச உணவு வழங்கப்படும் என்றும், எக்னாமி சாதாரண கட்டணத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு, இலவச உணவு இல்லை. அதே நேரத்தில் சலுகை கட்டணத்தில் அவர்களுக்கு உணவு வழங்கப்படும் என்றும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஆடி மாதம் அனைத்து பொருட்களுக்கும், தள்ளுபடி கொடுத்து வியாபார, நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்த நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், தங்கள் பயணிகளுக்கு, டிக்கெட் கட்டணத்தில் தள்ளுபடி கொடுத்து, பயணிக்க வரும்படி பயணிகளுக்கு, அழைப்பு விடுத்துள்ளது, பயணிகள் இடையே, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே, ஜூன் 12 ஆம் தேதி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், ஏர் இந்தியா விமானம் மிகக் கொடூரமான ஒரு, விமான விபத்தை சந்தித்தது. அதன் பின்பு பெரும்பாலான பயணிகள், ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் பயணம் செய்வதை தவிர்த்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. எனவே தங்களுடைய விமானங்களில், பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை குறைந்து விட்டதால், இதைப்போல் கட்டண தள்ளுபடி, சலுகை கட்டணம், இலவச உணவு என்று அறிவிப்புகள் செய்து, பயணிகளை கவர்ந்து இழுக்கிறார்களா? என்றும் பயணிகள் தரப்பில் பேசப்படுகிறது.