ஃபைட்டர்ஸ் அகாடமி சார்பில் 7 வது சர்வதேச கராத்தே போட்டி கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில், சிங்கப்பூர் மலேசியா தாய்லாந்து, உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இதில் சென்னை ஃபியூச்சர் சாம்பியன் அகாடமி சார்ந்த ஒன்பது மாணவ மாணவிகள் ஃபியூச்சர் சாம்பியன்ஸ் கராத்தே அகாடமி கராத்தே மாஸ்டர் ரங்கராஜ் தலைமையில் பங்கேற்றனர்.
நடைபெற்ற போட்டிகளில் ஃபியூச்சர் சாம்பியன்ஸ் அகாடமி சார்ந்த மாணவ மாணவிகள், கராத்தே போட்டியில் வென்று சாதனைப் படுத்தினர் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஃபைட்டர்ஸ் அகாடெமி சார்பில் கோப்பை மற்றும் , சான்றிதழ் வழங்கி சிறப்பித்தனர்.
பின்னர் செய்திகளை சிந்தித்து பேசிய கராத்தே மாஸ்டர் ரங்கராஜ் கூறுகையில் கோயம்புத்தூரில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் எங்களது மாணவர்கள் முதல் மற்றும் இரண்டாவது பரிசுகளை வென்று சாதனை படைத்தனர். தங்களது பெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தைகளுக்கு செல்போன் பயன்படுத்த விடாமல் இதுபோன்று விளையாட்டுக்களில் அதிக ஈடுபடுத்தினால் ஆரோக்கியத்துடனும், குழந்தைகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பேசிய மாணவ மாணவிகள் கூறும் பொழுது அதிக நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர். மலேசியா போன்ற நாடுகளுடன் விளையாடும் பொழுது மிகவும் கடினமாக இருந்த போதிலும் ரங்கராஜ் மாஸ்டர் அளித்த பயிற்சி நாளே நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம் எனவும், மேலும் விளையாட்டு துறையில் அரசு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.