காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதை நிரூபிக்கும் வகையில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வருகை பகுதியில் உணவகத்தின் மேலே இரண்டு காக்கைகள் முட்டையிட்டு குஞ்சு பொறித்தது.

குஞ்சு வளர்ந்த நிலையில் அங்கிருந்து கீழே விழுந்து விட்டது. அப்பகுதியில் பணியில் இருந்த இரண்டு அதிகாரிகள் அந்த காக்கை குஞ்சை விரட்டினார்கள்.
அப்பொழுது எங்கிருந்தோ இரண்டு காக்கைகள் பிள்ளைப் பாசத்தால் விரைந்து வந்து இரண்டு அதிகாரிகளையும் தாக்கியது.
ஆனால் அங்கிருந்த சூழல் காரணமாக காக்கை குஞ்சை அப்புறப்படுத்த முடியவில்லை
அதிகாரிகள் சலிப்படைந்து அங்கிருந்து நகர்ந்தனர். ஆனால் அந்த இரண்டு காக்கைகளும் கீழே வருவதும் பறப்பதும் பின் கண்காணிப்பது முக்கியம் எனக் கருதி குஞ்சை பாதுகாத்து கொள்கிறது.