தமிழகத்தில் யு.பி.எஸ்.சி., தேர்வு எழுத தற்போது அதிகமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக கோவை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்களுக்கு,மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயிற்சி பெற ஏராளமான பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் யு.பி.எஸ்.சி. போன்ற தேர்வுகளுக்கு புறநகர் பகுதிகளில் வசிப்பவர்களையும் தயார் படுத்தும் வகையில்,கோவையை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில்,ஜெ.எம்.சி.ஏ.எனும் பயிற்சி மையம் துவங்கப்பட்டுள்ளது.
கருமத்தம்பட்டி அன்னூர் சாலையில் துவங்கப்பட்டுள்ள இதற்கான துவக்க விழா அகாடமியின் தலைவர் ஜெசி தாமஸ் மற்றும் தலைமை செயல் அதிகாரி விக்டர் ஜார்ஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மூத்த சபை ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட் கலந்து கொண்டு அகாடமியை திறந்து வைத்தார்.
புதிய அகாடமியின் செயல்பாடுகள் குறித்து, ஜெ.எம்.சி.ஏ.தலைவர் ஜெசி தாமஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,யு.பி.எஸ்.சி.தேர்வெழுத ஆர்வமுள்ள மாணவர்களை அவர்களது ஆர்வம் மற்றும் திறமையின் அடிப்படையில் மட்டுமே, எங்களது அகாடமியில் பயிற்சி வழங்குவதற்கு தேர்வு செய்யப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் இங்கு திறமையான ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு தேவையான சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச்செய்து வழங்கி யு.பி.எஸ்.சி.தேர்வுகளுக்கு தயார் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.