கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கரூர் மெஜஸ்டிக் அரிமா சங்கம் ‘காமராசர் கல்வி மற்றும் சமூகப்பணிகள்’ என்ற தலைப்பில் நடத்திய பேச்சுப்போட்டியில் கரூர் பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளி மாணவிகள் முதல் மூன்று இடங்களையுமே வென்று மெச்சத்தகுந்த சாதனை படைத்துள்ளனர்.

கரூர் மாநகராட்சியின் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இந்த பேச்சுப்போட்டியில் கரூர் பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளி சிருஷ்டிகா முதலிடம், மதுலிகா இரண்டாமிடம், சுதர்ஷினி மற்றும் சாஸ்மிதா மூன்றாமிடம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
கரூர் மாநகராட்சி அளவில் அனைத்துப் பரிசுகளையும் வென்று அபார சாதனை படைத்த மாணவிகளுக்கு இன்று பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் சா.மோகனரங்கன் தலைமை தாங்கினார், செயலர் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மெஜஸ்டிக் அரிமா சங்கத் தலைவர் சிந்தன், செயலர் சிவக்குமார், வட்டாரத்தலைவர் வெங்கடரமணன், மக்கள் தொடர்பு அலுவலர் மேலை.பழனியப்பன் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், வெற்றிக்கு உறுதுணையாகவும் மேன்மேலும் இது போன்று வெற்றிகளை பெறுவதற்கு சிறப்பாக வழிக்காட்டி கொண்டு இருக்கும் பரணி கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர்.சொ.ராமசுப்பிரமணியன், முதல்வர் சு.சுதாதேவி, தமிழாசிரியர் பிரபாவதி ஆகியோருக்கு பரிசு வழங்கிப் பாராட்டினர்.
புகைப்படம் : காமராஜர் பிறந்ததின பேச்சுப்போட்டியில் வென்ற பரணி வித்யாலயா பள்ளி மாணவிகளுக்கும், வெற்றிக்கு உறுதுணையாக உள்ள பரணி கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர்.சொ.ராமசுப்பிரமணியன், முதல்வர் சு.சுதாதேவி, தமிழாசிரியர் பிரபாவதி ஆகியோருக்கு பரிசு வழங்கி பாராட்டும் பள்ளியின் தாளாளர் சா.மோகனரங்கன், மெஜஸ்டிக் அரிமா சங்கத் தலைவர் சிந்தன் மற்றும் நிர்வாகிகள்.