சிவகாசி அருகே உள்ள ஆண்டியாபுரத்தில் மாரியம்மன் பட்டாசு ஆலை உள்ளது.இந்தபட்டாசுஆலை நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலையாகவும் 60க்கும் மேற்பட்ட அறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பேன்சி ரக வெடிகள் தயாரிக்க அனுமதி பெற்ற இந்த பட்டாசு ஆலையில் கெமிக்கல் கலக்கும் அறையில் உராய்வு ஏற்பட்டதில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் இந்த அறையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு ஆண் இரண்டு பெண் உட்பட சம்பவ இடத்தில் உடல் கருகி பலியானார்கள். மேலும் மற்ற அறைகளுக்கும் தீ பரவியதால் அருகில் இருந்த மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக சிவகாசி தீயணைப்புத்துறையினர் மீட்டு
சிவகாசி மற்றும் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தகவல் இருந்து சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் நான்கு தீயணைப்பு வாகனங்களில் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .
பத்துக்கு மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இது குறித்து சிவகாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.