கேரள முன்னாள் முதல்வரும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவருமான அச்சுதானந்தன்(101) காலமானார். கடந்த மாதம் நெஞ்சு வலி ஏற்பட்டதால் அச்சுதானந்தன் திருவனந்தபுரம் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது. இவர் 2006 – 11 வரை கேரள முதலமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வயதுமூப்பு காரணமாக பொது வாழ்க்கையில் இருந்து விடைபெற்று, குடும்பத்தாருடன் தங்கியிருந்த இவருக்கு சில நாட்களுக்கு முன் நெஞ்சு வலி காரணமாக மருத்துவ மனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் இன்று உடல் நிலை மோசமான நிலையில் மரணம் அடைந்தார்.





