தேவகோட்டையில் ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதியின்ரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முகமதியர் பட்டணம் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் மதன் (16), அமீர் ஆகிய இருவரும் தேவகோட்டை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று பள்ளி விடுமுறை என்பதால் அப்பகுதியைச் சேர்ந்த சக நண்பர்களுடன் சாத்திக்கோட்டை விரு சுழி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

அப்போது, ஹரிஷ் மதன், அமீர் இருவரும் ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில்,சேற்றில் சிக்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் வந்து மாணவர்களின் உடல்களை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.