வருகின்ற 8.8.2025 வெள்ளிகிழமை அன்று மாலை 4 மணியளவில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு வருகை தர உள்ளார்.

அவர்களுக்கு ஒரு எழுச்சியான வரவேற்பு அளிப்பது குறித்து விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் சாத்தூர் .ரவிச்சந்திரன்* அவர்களின் ஆலோசனையின் பேரில் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கழகச் செயலாளர் பல்க் முனியசாமி தலைமையில் மாபெரும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார நிர்வாகிகள் கிளை, மாவட்ட, ஒன்றிய, கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் எடப்பாடியாருக்கு 100 வாகனங்களில் சென்று மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.