கோவை மாநகரில் பல்வேறு காய்கறி மார்க்கெட்டுகள் உள்ளன. அதில் அண்ணா மார்க்கெட், டி.கே மார்க்கெட், எம்.ஜி.ஆர் மார்க்கெட் உழவர் சந்தைகள் போன்ற மார்க்கெட்டுகள் உள்ளன. இங்கு நாள்தோறும் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுப் பொருள்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து விற்பனைக்காக இங்கு கொண்டு வருவது வழக்கம். இங்கு இருந்து மொத்தமாக ஏலம் மூலம் சில்லறை வியாபாரிகள் வாங்கிச் சென்று கோவை மாநகர் புறநகர் பகுதிகளில் கடைகள் மற்றும் நடைபாதை, இருசக்கர வாகன வியாபாரிகள் விற்பனை செய்து வருவது வழக்கம்.

இந்நிலையில் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வாகனங்களில் கொண்டுவரும் காய்கறிகளை மொத்த வியாபாரிகளின் கடைக்கு முன்பு பிளாஸ்டிக் பாக்ஸ்களில் அடுக்கி வைத்து செல்வது வழக்கம்.
கடந்த சில நாட்களாக காய்கறி மார்க்கெட்களில் உள்ள காய்கறிகள் மூட்டையாக மற்றும் பிளாஸ்டிக் பாக்ஸ்களில் வைத்து இருப்பது அப்படியே மொத்தமாக திருடு போவது தொடர்ந்து நடந்து வருவதாக வியாபாரிகள் குற்றம் சாட்சி வந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் உள்ள பிலால் எஸ்டேட் சாலையில் கடை ஒன்றில் முன் பகுதியில் காய்கறி அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இருசக்கர வாகனத்தில் வரும் அடையாளம் தெரியாத நபர். அங்கு வாகனத்தை நிறுத்தி அடுக்கி வைக்கப்பட்டு இருந்த காய்கறிகளை அப்படியே பிளாஸ்டிக் பாக்ஸுடன் தனது இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லுகிறார்.
அந்த காட்சிகள் கடையின் முன்பு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகள் அங்கு உள்ள கடை வியாபாரிகள் இந்த காட்சியில் உள்ள நபர் யார் ? யாருக்கேனும் தெரிந்தால் விபரங்களை பதிவிடவும் அல்லது திருடனை பிடிக்க உதவி செய்யவும் என்றும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து உள்ளனர். தற்பொழுது அந்த காட்சிகள் வெளியாகி வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.