மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல் கே பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில்
காமராஜர் பிறந்த நாள் விழா புதிய பாரத எழுத்தறிவு திட்ட தொடக்க விழா
நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா ஆகியன ஒருங்கிணைந்த கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவண முருகன் தலைமையில் நடைபெற்றது.

தலைமை ஆசிரியர் தென்னவன் முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் தஸ்லீம் பானு குத்து விளக்கு ஏற்றி புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை தொடங்கி வைத்தார். காமராசர் படத்திற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி காசிராஜன், ஆடிட்டர் ஐஸ்வர்யா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாணவ மாணவிகளின் பேச்சு கட்டுரை, ஓவியம், கவிதை, மாறுவேடம், வினாடி வினா ஆகிய போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆடிட்டர் சுரேஷ் மாணவ, மாணவிகளுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கினார். தொழிலதிபர் ஞான சிகாமணி, மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை நிறுவனர் பாலமுருகன் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினர்.

விழாவில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பெற்றோர்கள், விக்ரம் நர்சிங் கல்லூரி பேராசிரியை சௌமியா, அபிநயா மற்றும் விக்ரம் நர்சிங் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர் ராஜவடிவேல் நன்றி கூறினார்.