விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திருச்சிற்றம்பல குருநாதசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் மதுரை சாலையில் அமைந்துள்ள திருச்சிற்றம்பல குருநாதசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சனிக்கிழமை மாலை முதல் யாக சாலை பூஜைகள் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து காலை, மாலை யாக வேள்வி மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காலையில் சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க திருச்சிற்றம்பல குருநாதசுவாமி விமான கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றினர்.

பின்னர் பரிவார தெய்வங்களுக்கும் கும்பநீர் ஊற்றி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் குருநாதசுவாமி காட்சி அளித்தார். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் ராஜபாளையம் மற்றும் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழாக் கமிட்டியினர் செய்திருந்தனர்.