• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நள்ளிரவில் 2 லாரிகள் மோதி கோர விபத்து..,

ByKalamegam Viswanathan

Jul 14, 2025

திண்டுக்கல் கொடைரோடு, சிப்காட் தொழிற்பேட்டை அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் முன்னாள் சென்ற சரக்கு லாரி மீது பின்னால் சென்ற குடிதண்ணீர் பாட்டில்களை ஏற்றி சென்ற மற்றொரு லாரி மோதி கோர விபத்தில் ஏற்பட்டது.

இந்த விபத்தில் தண்ணீர் பாட்டில்கள் ஏற்றி சென்ற லாரியில் நான்கு பேரில் ஒருவர் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவருக்கு கால் தொடை பகுதிக்கு மேல் துண்டானது. மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த அம்மையநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆம்புலன்ஸ் டிரைவர்கள் உதவியுடன் சுமார் 1.30 மணி நேரம் போராடி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும் படுகாயம் அடைந்த 3 பேரை சிகிச்சைக்காகவும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.