விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு மாவட்டம் சார்பில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மாநில சமத்துவ வெள்ளி விழா மற்றும் 25வது மாநில மாநாடு மக்கள் சந்திப்பு கூட்டம் திண்டுக்கல்லில் ஆகஸ்ட் 24 தேதி நடைபெறுகிறது.

அதனே முன்னிட்டு. இராஜபாளையம் ஒன்றிய பகுதியிலான தேவதானம் சேத்தூர் மற்றும் நகரப் பகுதியான வேலாயுதபுரம் மேல ஆவரம்பட்டி பகுதிகளில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் கலந்து கொண்டு பொது மக்களை சந்தித்து மாநாட்டு அழைப்பிதழ் வழங்கி தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . விழா ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் மாடசாமி மாவட்ட செயலாளர் கடற்கரை (எ) குட்டி . மாவட்ட இணைச்செயலாளர் முத்துக்குமார் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.