விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலையில் மூங்கில் மரங்கள் உள்ளது இதில் தீப்பிடித்து எரிவதாக இராஜபாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தேசிய நெடுஞ்சாலையில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். மூங்கில் மரங்களில் தீப்பிடித்து எரிந்ததால் மூங்கில் வெடி வெடிப்பது போல் சத்தத்துடன் வெடித்து கொழுந்து விட்டு தீ எரிந்தது. நீண்ட நேரம் போராடி தீயணைப்பு இவர்கள் தீய அணைத்துள்ளனர். சாலையோரம் கிடக்கும் மரத்தின் சருகுகள் மீது சமூக விரோதிகள் தீய பத்தவைத்து சென்றதால் இந்த தீ விபத்து நடந்துள்ளது. இந்த தீ விபத்தினால் சாலை முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது.
