மது போதையில் வாகன ஓட்டி விபத்து ஏற்படுத்திய காவலரால் புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பபட்டது.
பெரம்பலூரில் பணிபுரியும் காவலர் பிரசாந்த், மேட்டுப்பட்டி டிவிஎஸ் மறுப்புநீ ரோட்டில் தனியார் பள்ளி நுழைவாயிலில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்தி, இரண்டு நபர்களை கீழே தள்ளிவிட்டு காயத்தை ஏற்படுத்தினார்.
மதுபோதையில் காவலராகிய நீங்கள் வாகனம் ஓட்டலாமா என்று கேள்வி கேட்ட அப்பகுதி மக்களை தாக்க முயன்று மீண்டும் வாகன உள்ளேயே அமர்ந்து மது அருந்தி பொதுமக்களை தாக்க முயன்ற காவலர் பிரசாந்த் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துனர்.