சென்னை அடுத்து ஜமீன் ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் சித்ரா. இவருடைய கணவர் ஸ்ரீதரன். இவருக்கு வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பு ஏற்பட்டு அவருக்கும் இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் ஸ்ரீதரன் உயிரிழந்தார்.

ஸ்ரீதரனின் முதல் மனைவியான சித்ராவிற்கு இரண்டு பெண் வாரிசுகள் உள்ள நிலையில் பூர்வீக சொத்தை போலி சான்றிதழ் மூலம் ஸ்ரீதரன் இரண்டாம் மனைவியின் தரப்பினர் 23 வது திமுக மாமன்ற உறுப்பினர் கண்ணன் உள்ளிட்டோர் போலி ஆவணம் தயாரித்து செல்வராஜ் என்பவருக்கு பத்திரபதிவு செய்து விட்டதாக சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல் துறையில் புகாரை ஏற்க மறுத்த நிலையில் தாம்பரம் மாநகர ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்த நிலையில் மனுவினை விசாரிக்கும் படி சிட்லபாக்கம் காவல் நிலையத்திற்கு தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிரப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் புகார் அளித்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆன நிலையிலும் சிட்லபாக்கம் காவல்துறை ஆய்வாளர் கன்னியப்பன் திமுக 23 வது மாமன்ற உறுப்பினர் கண்ணனுடன் சேர்ந்து கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்டோர் காவல் நிலைய முன்பாக தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது பேசிய சித்ராவின் மகள் சுபஸ்ரீ எங்கள் இடத்தை போலியாக ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக திமுக 23 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கண்ணன் மீது நாங்கள் புகார் கொடுத்தும் அந்த புகாரை காவல்துறையினர் விசாரிக்கவில்லை என கூறினார் மேலும் திமுக மாமன்ற உறுப்பினர் என்பதால் அவருடன் சேர்ந்தே காவல்துறையினரும் எங்களை சமரசமாக செல்லுங்கள் என வற்புறுத்துவதாகவும் கொடுக்கும் பணத்தை வாங்கிச் செல்லுங்கள் என அவர்களை வற்புறுத்துவதாகவும் கூறினர்.
காவல்துறையினர் இதுவரையில் சி எஸ் ஆர் கூட பதிவு செய்யாத நிலையில் தொடர்ந்து திமுக மாமன்ற உறுப்பினருடன் இணைந்து கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினர்.