பொது இடங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் அய்யாதுரை தலைமையில் பாப்பாகோவில், ஒரத்தூர் வடுவூர், கலசம்பாடி , உள்ளிட்டிட்ட பல்வேறு பகுதிகளில் அனைத்து அரசியல் கட்சிகளின் கொடிகம்பங்களும் ஜேசிபி இயந்திரங்கள் உதவியோடு அப்பறப்படுத்தப்பட்டன.
கொடிக்கம்பங்கள் அகற்றும் போது பிரச்சனைகள் ஏதும் வராமலிருக்க வருவாய்துறையினர் மற்றும் காவலர்கள் பாதுகாப்போடு கொடிகள் அகற்றப்படுகிறது. இதில் உதவி பொறியாளர்கள் முருகானந்தம், சிவசந்திரன் மற்றும் வருவாய்துறையினர் ஈடுப்பட்டுள்ளனர்.
