குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிகழ்வில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பீட்டர் அல்போன்ஸ் பங்கேற்பு கட்சியினருக்கு
அடையாள அட்டை வழங்குதல்,

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் விரல் விட்டு எண்ணும் மாதங்களே இருக்கும் நிலையில், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி மிக வலுவாக இருக்கும் நிலையில்,
திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கையை விட வரும் 2026_சட்டமன்ற தேர்தலில் அதிகமான இடங்கள் வேண்டும் என, திமுகவில் இருக்கும் ஒவ்வொரு கட்சிகளும் பொது வெளியில் பேசி வரும் நிலையில்,

காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை. காங்கிரஸ் கட்சியை வலிமைப் படுத்துவதுடன், காங்கிரஸ் போட்டியிடும் இடங்களில் முழுவதும் வெற்றியை ஈட்டும் வகையில் தமிழகத்தில் அனைத்து கிராமங்களில் கிராம கமிட்டி’ அமைக்கும் வகையில் 70_ சதவீத பணிகளை நிறைவு செய்துவிட்ட நிலையில், எஞ்சிய கிராம பகுதிகளில் பணியை துரிதப்படுத்தி வரும் நிலையில்,
தமிழகத்தில் காங்கிரஸ் கோட்டையான கன்னியாகுமரி மாவட்டத்தில்,
குமரி கிழக்கு, மேற்கு மாவட்டங்களை ஒன்றிணைத்து, அழகிய மண்டபம் பகுதிக்கு அடுத்துள்ள வட்டம் பகுதியில் உள்ள புனித பெரியநாயகி அன்னை ஆடிட் டோரியத்தில் நடந்த விழாவில்,

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, பீட்டர் அல்போன்ஸ், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் பூரூஸ், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ரூபி மனோகர்,தாரகை கத்பட் ஆகியோர் முன்னிலையில்
கிராம கமிட்டி காங்கிரஸ் கட்சியினரும் Q.R.Code_ உடனான காங்கிரஸ் அடையாள அட்டையை வழங்கி பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர். பெரும் தலைவர் காமராஜரை 1969_நாடாளுமன்ற இடைத்தேர்தலிலும்,1971_ நாடாளுமன்ற பொதுத்தேர்தலிலும் வெற்றி பெற செய்த காங்கிரஸ் கட்சியின் வேர்கள் பலமாக இருக்கும் குமரி மாவட்டத்தில் இந்த அடையாள அட்டை வினியோகம் முதல் பணியை தொடங்கி வைப்பதில். தமிழகம் முழுவதும் உள்ள தேசிய நெஞ்சங்கள் பெருமை மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறோம் என தெரிவித்தார்.
விழாவில் பங்கேற்று போசிய பீட்டர் அல்போன்ஸ். குமரியின் காங்கிரஸ் கட்சியின் மூத்த முன்னோடிகளான பொன்னப்பநாடார், டென்னிஸ் மோஷஸ் சுவாமி தாஸ்
அப்புநடேசன் டாக்டர் குமாரதாஸ் மகாதேவன் பிள்ளை இவர்களோடு அவருக்கு இருந்த நட்பை பதிவு செய்தவர் கிராம கமிட்டி அடையாள அட்டை பற்றிய பயன்பாட்டை,
நன்மையை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள காங்கிரஸ் கட்சியினரை சென்னை சத்தியமூர்த்தி பவனில் இருந்தே அடையாளம் காணவும்,
தொடர்புக்கும் எப்படி ஒரு பாலமாக பயன்படும் என்பதை ஒவ்வொரு தொண்டனும் நன்கு புரியும் வண்ணம் தெரிவித்தார்.
தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழா. தேசிய கீதத்துடன் நிறைவடைந்தது.