கர்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் பல புற்றுநோய் பாதிப்புகளை தவிர்க்க சிறுவயதில் ஹெச்.பி. வி. தடுப்பூசி செலுத்திகொள்வது அவசியம் – என பொதுமக்களுக்கு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா (SII) தலைமையிலான நாடு தழுவிய பொது சுகாதார முன்முயற்சியின் ஒரு பகுதியாக, “கான்கெர் ஹெட்ச்.பி.வி (HPV) & கேன்சர் மாநாடு 2025” கோவையில் தொடங்கியது.

கோவையில் நடந்த நிகழ்வில், மருத்துவ நிபுணர்கள் குழு ஒன்று கூடி ஹெட்ச்.பி.வி (HPV)-யின் பொது சுகாதாரத் தாக்கங்கள் குறித்து விவாதித்தனர். விழிப்புணர்வுக்கான அவசரத் தேவை, இளம் பருவத்தினர் மற்றும் பெற்றோர்கள் இருவரையும் சென்றடைவதன் முக்கியத்துவம் மற்றும் தடுப்பு பராமரிப்புக்கு வழிகாட்டுவதில் சுகாதார வழங்குநர்களின் பங்கு ஆகியவற்றை எடுத்துரைத்தனர்.

அப்போது பேசிய அவர்கள் பெரும்பாலான ஹெட்ச்.பி.வி (HPV) தொற்றுகள் 15 முதல் 25 வயதுக்குள் ஏற்படுவதால், ஆரம்பகால விழிப்புணர்வு மற்றும் சரியான நேரத்தில் தடுப்பு மிகவும் முக்கியம். இப்போது குறைவான விலையில் ஹெட்ச்.பி.வி (HPV) தடுப்பூசி கிடைப்பதால், ஹெட்ச்.பி.வி (HPV) தொடர்பான புற்றுநோய்களிலிருந்து அனைவரையும் பாதுகாப்பது இன்னும் எளிதாகிவிட்டது என்றனர்.
இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்க்கான இரண்டாவது முக்கிய காரணமாக கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் உள்ளது. என்றும் ஆண்டுதோறும் கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1,23,907 என கூறினர்.