கோவை மையப் பகுதியில் உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதியில் தினமும் காலையும், மாலையும் நூற்றுக் கணக்கான மக்கள் நடைப் பயிற்சிக்காக வருகை தருவர். இந்தப் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 5 அடி நீளம் உள்ள பச்சை பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது.

நடைப்பயிற்சிக்கு மேற்கொண்ட சிலர் பாம்பை கவனித்ததோடு மட்டும் நிற்காமல், அந்தப் பாம்பை யாரும் மிதிக்காமல், இருசக்கர வாகனத்தில் நசுக்காமல், அது யாரையும் கடிக்காமல் பாதுகாப்பாக சாலை ஓரமாக கொண்டு சென்று விட்டனர். இதனால் பாம்பின் உயிர் காக்கப்பட்டது.
இச்சம்பவம் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும், மனிதர்களின் மனிதநேயத்தை எடுத்துச் செல்லும் ஒரு நல்ல உதாரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.