• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

செய்தியாளர்களை சந்தித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்..,

ByAnandakumar

Jul 5, 2025

கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கட்சி நிர்வாகிகளுடன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

கரூர் அவனியாபுரம் என்ற இடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணல் மாட்டு வண்டியை பிடித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த இடத்திற்கான சர்வே எண் எனது தம்பி சேகர் நிலம் எனக்கூறி பொய்யான காரணங்களை சுட்டிக்காட்டி, அவர் மீது வழக்கு பதிவு செய்ய முயற்சி செய்தனர். மதுரை உயர்நீதிமன்றத்தில் புகார் மனு கொடுத்தோம். அதன் பிறகு அவருக்கும் அந்த மணல் வண்டிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நீதிமன்றத்தில் போலீசார் கடிதம் கொடுத்தனர்.

கரூர் அதிமுக முன்னாள் கரூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பாலமுருகன், நில விற்பனை தொடர்பாக கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் காலை நடை பயிற்சி சென்ற போது, கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமிக்கும் எனக்கும் பிரச்சனை இருப்பதாக பொய்யான செய்திகளை பரப்புகின்றனர். இது தொடர்பாக சன் டிவி மீது வழக்கு தொடர இருக்கிறோம்.

திமுகவினர் என்னை பாஜகவில் இணைவதாக சமூக வலைதளங்களில் கருத்தை தெரிவித்து வருகின்றனர். விரைவில் பாஜக செல்வது யார் என்று குறித்து பொதுக்கூட்டத்தில் தெரிவிக்கிறேன் என்று கூறினார்.

கரூரில் மணல் கொள்ளை அதிகாரிகள் துணையுடன் நடக்கிறது. காவிரி ஆற்றுப்படுகையில் நாளொன்றுக்கு 200 லாரிகளில் மணல் அள்ளுகின்றனர். அதிமுக சார்பில் விரைவில் மணல் கொள்ளைக்கு எதிராக களம் இறங்க இருக்கிறோம். புகார் கொடுத்த ரகுநாத் என்பவர் சமரசம் செய்து கொள்வதாக தெரிவித்த பிறகு அவர் கடத்தப்பட்டுள்ளார். அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது.

எத்தனை வழக்குகள் அதிமுகவினர் மீது பதிந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.