கோவை, பேரூர் வட்டம், ஆலாந்துறை பகுதியில் செயல்பட்டு வரும் சங்கமம் கலைக் குழுவின் 101 – வது ஒயிலாட்ட அரங்கேற்ற விழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு, கோவை பேரூர் ஆதீனம் 25-ம் குரு மகா சன்னிதானம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் மற்றும் கோவை, சரவணம்பட்டி கௌமார மரபு தண்டபாணி சுவாமிகள், சிறை ஆதீனம் நான்காம் குரு மகா சன்னிதானம் குமர குருபர சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்து அருளாசி வழங்கி விழாவை தொடங்கி வைத்தனர்.
மேலும் சங்கமம் கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கனகராஜ் மற்றும்
விழாவில் சூலூர் இயற்கை வேளாண் விஞ்ஞானி மயில்சாமி கௌரவ விருந்தினராக பங்கேற்று விழாவுக்கு சிறப்பு சேர்த்தார்.

இந்நிகழ்வில், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
பண்பாட்டு பாரம்பரியத்தையும், நாட்டிய கலையையும் காக்கும் வகையில் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும். இவ்விழா, பாரம்பரியக் கலைக் கழகத்தில் மேலும் ஓர் புதிய படிக்கட்டாக அமைந்தது. இதில் 500 மேற்பட்ட பெண்கள் ஒயிலாட்டம் ஆடி பாடி மகிழ்ந்தனர். இதில் இசை கலைஞர் சிவகுகன்,துணை பயிற்சியாளர்கள் ஆனந்தி சோமசுந்தரம், சுகன்யா விஜயகுமார், செல்வன் அஸ்வின் சோமசுந்தரம்,சிந்து சசிக்குமார் மற்றும் ஏராளமான ஊர் பொதுமக்கள் திரளான பேர் கலந்துகொண்டனர்.