திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அடுத்த ராஜக்காபட்டி ஊராட்சி கல்லுப்பட்டி சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (39). விவசாயி இவர் பா.ஜ.க உறுப்பினர் உள்ளார். (4 வருடங்களுக்கு முன் சாணார்பட்டி முன்னாள் வடக்கு ஒன்றிய செயலர்). இவருக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில் வியாழன்கிழமை மாலை 6 மணி அளவில் ராஜக்காபட்டி அருகிலுள்ள மடூர் பிரிவில் முத்தாலம்மன் பூஞ்சோலை கோவில் என்ற இடத்தில் தனது நண்பர்களுடன் பாலகிருஷ்ணன் அமர்ந்திருந்த பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த சிலர், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. அதில் சம்பவ இடத்திலேயே பாலகிருஷ்ணன் உயிரிழந்தார். தகவல் அறிந்த சாணார்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தியதில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீப் மற்றும் துணை கண்காணிப்பாளர் சிபி சாய் சௌந்தர்யன் விசாரணை நடத்தினர்.
