கரூரில் ஓரணியில் தமிழ்நாடு எனும் தலைப்பில் திமுக உறுப்பினர் சேர்க்கும் பணியினை தனது சொந்த தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார் – மாவட்டத்தில் மூன்று லட்சத்திற்கு மேலான வாக்காளர்களை உறுப்பினராக இணைப்பதற்கு இலக்கு வைத்துள்ளதாக பேட்டி அளித்தார்.

திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை இன்று முதல் தமிழகம் முழுவதும் துவங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோடங்கிப்பட்டியில் முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
வழக்கமாக பிரச்சாரத்தை இந்த கிராத்தில் உள்ள பட்டாளம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு தொடங்குவது வழக்கம். அதே போன்று இன்றும் அக்கோவிலில் அப்பகுதி திமுக பொறுப்பாளர்களுடன் சாமி தரிசனம் செய்த பின்பு உறுப்பினர் சேர்க்கையை செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

அப்பகுதியில் வீடு வீடாக சென்று அவர்களிடம் திமுக அரசின் சாதனை திட்டங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கி, திமுகவில் இணைந்து கொள்கிறீர்களா என கேட்டு அவர்களை மொபைல் ஆப் மூலம் உறுப்பினர்களாக சேர்த்து வருகின்றனர்.
மாவட்டத்தில் 8 லட்சத்திற்கும் மேல் வாக்காளர்கள் இருப்பதாகவும், மூன்று லட்சத்திற்கு மேலான வாக்காளர்களை உறுப்பினர்களாக இணைப்பது என்ற இலக்குடன் செயல்பட்டு வருவதாக செந்தில் பாலாஜி தெரிவித்தார்.