மதுரை கருப்பாயூரணி பகுதியில் உள்ள தனியார் மகாலில் விசிக நிர்வாகி வழக்கறிஞர் வில்லவன் கோதை இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
தொடர்ந்து பேட்டியளித்த அவர்,

மடப்புரம் அஜித்குமார் புலன் விசாரணை என்ற பெயரால் காவல் துறை தாக்குதலுக்கு ஆளாகி உயரிழந்திருக்கிறார். இந்த கொடூரமான செயலை விடுதலை சிறுத்தைகள் கட்சி மிகவும் வன்மையாக கண்டிக்கிறது. இந்த வழக்கில் முதல்வர் அவர்களே நேரடியாக தலையிட்டு இதனை சிபிஐ விசாரிக்க அனுமதி வழங்கி இருக்கிறது. வெறும் ஆறுதலை அளிக்கிறது இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராட்டுகிறது. தொடர்புடைய காவலர்கள் அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இதுபோன்று குற்ற செயல்களுக்கு பின்னால் நடவடிக்கை எடுப்பதை விட காவல் நிலையத்தில் கட்டுப்பாட்டில் இருக்கிறபோது மன்மங்கள் சித்ரவதைகள் நடைபெறாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். புலன் விசாரணை எப்படி நடக்க வேண்டும் என்பதை ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலை தெரிவித்துள்ளது. அந்த வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டும்.

இந்த காவல் நிலையத்தில் அதற்கென்று இருக்கிற சட்ட ஒழுங்கு காண காவல் ஆய்வாளர் விசாரித்துக் கொண்டிருக்கிற பொழுது அடுத்த நாள் காலையில் வாருங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும். பொழுது டிஎஸ்பி தலைமையிலான குற்றப்பிரிவை சேர்ந்த தனிப்படையினர் அவர்களை விசாரணைக்கு அழைத்தது விதிமீறலாக கருதப்படுகிறது. தனிப்பட்ட முறையில் அவர்கள் விசாரணையை நடத்தியது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.
ஏற்கனவே அந்த ஆய்வாளர் சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவிற்கு பொறுப்பான ஆய்வாளர் , முதற்க்கட்டமாக விசாரித்துவிட்டு அடுத்த நாள் வாருங்கள் என்று சொல்லிவிட்டார். இந்த நிலையிலே தனிப்படையை சேர்ந்தவர்கள் விசாரணை செய்தது அதிர்ச்சி அளிக்கிறது என்றார்.