குமரி மேற்கு மாவட்ட செயலாளராக வெகு காலமாக இருந்து வந்த ஜான் தங்கம் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு,அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை ஜான் தங்கம் வகித்த குமரி மேற்கு மாவட்ட செயலாளர் பதவியில் ஜெய சுதர்சன் புதிதாக நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஜெயசுதர்சன் அதிமுகவில் கடந்த 25_ஆண்டுகளாக கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர்.
புதிதாக மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்ட
ஜெயசுதர்சனுக்கு கட்சி நிர்வாகிகள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.